This Article is From Mar 18, 2020

பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் கொரோனா வைரஸ் பரவல் குறித்துக் கலந்துரையாடல்

இது பல லட்சம் மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் கொரோனா வைரஸ் பரவல் குறித்துக் கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவின் இளவரசருடன் பேசினார்.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதிலிருந்து எழும் உலகளாவிய சவாலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியம் குறித்து விவாதித்தார்.

இந்த உரையாடலின் போது, ​​சார்க் நாடுகளிடையே தொற்றுநோய் குறித்து வீடியோ மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான இந்தியாவின் சமீபத்திய முயற்சி குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் என்று பிரதமர் அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 தலைவர்களின் மட்டத்தில் இதேபோன்ற முயற்சி உலக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

COVID-19 வைரஸின் உலகளாவிய பரவலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளக் குறிப்பிட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக விவாதிக்கவும், உலக மக்கள் மீது நம்பிக்கையை வளர்க்கவும் இம்முயற்சியானது பயன்படலாம்.

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு நாடுகளிடையே ஒருங்கிணைப்பு தேவை என்று பிரதமர் மோடி விவாதித்தார், இது பல லட்சம் மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.