This Article is From Aug 08, 2019

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து ஏன்? நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று விளக்கம்!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு மோடி இன்று விளக்கம் அளிக்கிறார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து ஏன்? நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று விளக்கம்!

கடைசியாக மக்களவை தேர்தலில் போது நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றினார்.

New Delhi:

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் விளக்கம் அளிக்க உள்ளார். 

கடந்த மார்ச் 27ம் தேதி மக்களவை தேர்தலின் போது மக்களிடம் உரை நிகழ்த்திய மோடி ஏசாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் உளவு பார்த்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடி தலைமையிலான அரசு, அண்மையில் முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய மதோசாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் மோடி விளக்கம் அளிக்கிறார். 

இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தவும் மோடி திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னோட்டம் போன்று இன்று தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார்.

.