This Article is From Nov 11, 2019

Ayodhya தீர்ப்பு குறித்து நாட்டு மக்களுக்கு PM Narendra Modi உரை!

Ayodhya Verdict - "பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட ஒரு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது"

Ayodhya தீர்ப்பு குறித்து நாட்டு மக்களுக்கு PM Narendra Modi உரை!

Ayodhya Verdict - "இந்திய நீதித் துறையின் பொற்காலம் இது. இந்த வழக்கில், நீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு, அனைவருக்குமான தீர்ப்பை வழங்கியுள்ளது."

அயோத்தி வழக்கில் (Ayodhya Case) இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (Ranjan Gogoi) தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றினார்.

இதன்படி சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு, அயோத்தியிலேயே மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுவது தொடர்பான திட்டத்தை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

பிரதமர், “மொத்த நாடும், அயோத்தி வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று நினைத்தது. அது நடந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சென்று கொண்டிருந்த இந்த வழக்கு, இறுதியாக நிறைவு பெற்றுள்ளது. இந்த தீர்ப்பு வந்ததையடுத்து, ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு மதமும், அதை வரவேற்றது, இந்தியாவின் பழம் பெரும் கலாசாரத்துக்கும் சமூக நல்லிக்கணத்திற்கும் சான்றாக அமைந்தது. இந்தியாவின் ஜனநாயகம் எவ்வளவு உறுதியானது என்றும் ஸ்திரமானது என்றும் உலகம் இன்று பார்த்தது. 

பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட ஒரு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய நீதித் துறையின் பொற்காலம் இது. இந்த வழக்கில், நீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு, அனைவருக்குமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 

உச்ச நீதிமன்றம், தனது சக்தியையும் முனைப்பையும் காட்டியுள்ளது. அந்த காரணத்திற்காகத்தான் நீதிபதிகள், நீதிமன்றங்கள் மற்றும் நீதித் துறை பாராட்டப்பட வேண்டும். 

புதிய இந்தியாவில் அச்சத்துக்கு, வெறுப்புக்கு, எதிர்மறைக்கு இடமில்லை,” என்று உரையாற்றினார். 
 

.