This Article is From Aug 12, 2020

குஜராத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க கோரிய பிரதமர் மோடி!

Gujarat COVID-19 Cases: குஜராத்தின் தினசரி சோதனை சராசரி ஒரு மில்லியனுக்கு 456 சோதனைகள் என்று பிரதமருக்கு தெரிவித்தார்.

குஜராத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க கோரிய பிரதமர் மோடி!

குஜராத்தில் கொரோனா சோதனையை அதிகரிக்க கோரிய பிரதமர் மோடி!

Ahmedabad:

குஜராத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகி வருவதை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் சோதனையை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

சமீபத்திய கொரோனா நிலவரம் குறித்து குஜராத்தின் விஜய் ரூபானி உட்பட 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். 

சோதனை விகிதம் குறைவாகவும், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள மாநிலங்களில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த மாநிலங்கள் பீகார், குஜராத், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்டவை ஆகும். 

இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த மாநிலங்களில் சோதனையை அதிகரிப்பதற்கான இந்த ஆலோசனை வெளிவந்தது" என்று பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.

இந்த காணொளி சந்திப்பில் பங்கேற்ற முதல்வர் விஜய் ரூபானி, குஜராத்தின் தினசரி சோதனை சராசரி ஒரு மில்லியனுக்கு 456 சோதனைகள் என்று பிரதமருக்கு தெரிவித்தார்.

குஜராத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்த 34 அரசு மற்றும் 59 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நகரங்களிலும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்படுகின்றன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது சுமார் 47,000 கொரோனா படுக்கைகள் மற்றும் 2,300 வென்டிலேட்டர்கள் உள்ளன என்று விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

.