மோடி அரசில் மத்திய அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்ட முக்கியப் புள்ளிகள்!! - விவரம் உள்ளே!

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராஜ்யவர்தன் சிங் ரதோர் உள்ளிட்டோரின் பெயர் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மோடி அரசில் மத்திய அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்ட முக்கியப் புள்ளிகள்!! - விவரம் உள்ளே!

அருண் ஜெட்லி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


New Delhi: 


பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம் பெறவில்லை. மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக அமித் ஷா இடம்பெற்றிருக்கிறார். 

அருண் ஜெட்லி

முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 18 மாதங்களாக கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் முக்கியப் புள்ளியாக இருந்த அருண் ஜெட்லி, அமைச்சரவையின் அதி முக்கிய முடிவுகளை வெளியிட்டவர் ஆவார். 66 வயதான அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனால் இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யாத அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற சென்றிருந்தார். 

சுஷ்மா சுவராஜ்

முந்தைய ஆட்சியில் வெளியுறவ அமைச்சராக சுஷ்மா இருந்தார். இன்றைக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவர் பார்வையாளராக மட்டுமே கலந்து கொண்டார்ங. 67-வயதாகும் சுஷ்மா சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மத்திய அமைச்சராக உள்ளார். ட்விட்டரில் அவரிடம் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் சுஷ்மா செல்வாக்கை தக்க வைத்துள்ளார். 

ராஜ்யவர்தன் ரத்தோர்

துப்பாக்கிச் சூட்டில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான ரத்தோர், கடந்த ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். 49-வயதான அவருக்கு இந்த ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. முன்னாள் ராணுவ வீரரான ரத்தோர், சொந்த மாநிலமான ராஜஸ்தானில் போட்டியிட்டு 2-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஜெயந்த் சின்ஹா

முந்தைய ஆட்சியில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சராக இருந்தவருக்கு தற்போது அமைச்சர் பொறுப்பு வாங்கப்படவில்லை. முதலில் அவர் நிதித்துறை இணை அமைச்சராகத்தான் இருந்தார். பின்னர் அவருக்கு விமானப் போக்குவரத்து துறை வழங்கப்பட்டது. இவரது தந்தை பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜே.பி. நட்டா

ஜெயப் பிரகாஷ் நட்டா என்ற ஜேபி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக முந்தைய ஆட்சியில் இருந்தார். இமாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட நட்டாவுக்கு இந்த முறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. பாஜகவின் அடுத்த தலைவராக இவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................