This Article is From Sep 07, 2019

பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சொன்ன ஆறுதல் : இந்தியா உங்களுடன் இருக்கிறது

Chandrayaan 2: இந்திய தேசமே உங்களுடன் நிற்கிறது என்றும் இந்திய விண்வெளித் திட்டத்தின் சிறந்த விஷயங்கள் எதிர்காலத்தில் வரும் என்றும் கூறினார்.

Chandrayaan 2: இஸ்ரோ தலைவர் சிவனை கட்டி அணைத்துக் கொண்டார்

Bengaluru:

சந்திரயான் -2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை நெருங்கி சுற்றி வந்த விக்ரம் லேண்டர் தரையிரங்கும்போது  தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி காலை இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பேசினார். “நீங்கள்தான் நாட்டிற்காக வாழ்கிறீர்கள் இந்தியாவின் தலையை உயர்த்த உங்களின் சொந்த கனவுகளை தியாகம் செய்து நீங்கள்தான் தூக்கமில்லாத இரவுகளை கொண்டீர்கள்” பெங்களூரில் உள்ள விண்வெளி அமைப்பின் தலைமையகத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி கூறினார்.

விக்ரம் லேண்டரின் திட்டமிட்ட தரையிரக்கத்தைக் காண பெங்களூருக்கு வந்திருந்தார் பிரதமர் மோடி. இஸ்ரோ விஞ்ஞானி இந்திய தேசமே உங்களுடன் நிற்கிறது என்றும் இந்திய விண்வெளித் திட்டத்தின் சிறந்த விஷயங்கள் எதிர்காலத்தில் வரும் என்றும் கூறினார்.

“நேற்று இரவு உங்கள் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் சோகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது... நீங்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை என்று கூறினார். 

சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கை குலுக்கினார். இஸ்ரோ தலைவர் சிவனை கட்டி அணைத்துக் கொண்டார். சிவனின் லட்சியத்தில் ஏற்பட்ட பின்னடைவால் உணர்ச்சி வசப்பட்டார்.

பதட்டமான தருணங்களை கவனித்த பிரதமர் மோடி டாக்டர் சிவன் விளக்கமளித்த பிறகு உடனடியாக பிரதமர் மோடி அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

.