This Article is From Jan 28, 2019

சிகரெட் பிடித்த பைலட்; பறிபோன 51 உயிர்கள்- அதிர்ச்சித் தகவல்!

மார்ச் 2018 –யில் யுஎஸ் – பங்களா ஏர்லைன் பம்பாடியர் UBG 211 விமானம் விபத்தில் சிக்கியது. இதில், 51 பேர் உயிர் இழந்தனர்.

சிகரெட் பிடித்த பைலட்; பறிபோன 51 உயிர்கள்- அதிர்ச்சித் தகவல்!

நேபாளத்தின் விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்தது

ஹைலைட்ஸ்

  • மார்ச் 2018 யில் நடந்த விமான விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்
  • தடைகளை மீறி பைலட் புகைப்பிடித்தார் என தெரியவந்துள்ளது
  • விமான பணியாளர்களின் கவனகுறைவும் விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது
Kathmandu, Nepal:

கடந்த மார்ச் 2018 –யில் யுஎஸ் – பங்களா ஏர்லைன் பம்பாடியர் UBG 211 விமானம் விபத்தில் சிக்கியது. இதில், 51 பேர் உயிர் இழந்தனர்.

இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்த விசாரணையின் முடிவில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன.

இந்த விபத்திற்கான முக்கிய காரணமாக பைலட் புகைப்பிடித்தது தான் என தெரியவந்துள்ளது.

இந்த விமான நிறுவனமானது விமானத்தில் புகைப்பிடிக்க தடை விதித்துள்ளது. அதனை மீறியும் அந்த விமானத்தின் பைலட் புகைப்பிடித்துள்ளார்.

அந்த விமானத்தில் இருந்த CVP (காக்பிட் வாய்ஸ் ரெக்காடர்) மூலம் பைலட் புகைப்பிடித்தது தெரியவந்துள்ளது.

நேப்பாளத்தில் திருப்புவான் விமான நிலையத்தில் இந்த விமானமானது தரையிறங்கும் போது தான் விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த விமானத்தில் பணிபுரிந்தவர்களின் கவனமின்மையும் இந்த விபத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தரையிறங்கும் போது, விமானத்தின் உயரம் மற்றும் ஏனைய விவரங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அதனால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கு திசையில் பலமான காற்று வீசும் போது, தெற்கு திசையில் விமானம் தரையிறங்கியதால் தரையில் மோதி, விமானம் விபத்துக்குள்ளானது. பைலட் புகைப்பிடித்ததால், அவரது கவனம் விமானத்தை தரையிறக்குவதில் இல்லை. அந்த விமானத்தில் பயணித்த 67 பேரில் 45 பேரும் விமானத்தில் பணிபுரிந்த 4 நான்கு பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தனர் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

.