மசூத் அசார் தலைமையில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, இந்தியா மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலுக்கு காரணமாக இருந்துள்ளது
New Delhi: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷராஃப், ‘ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை, இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்தியது' என்கின்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
ஹம் நியூஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு போன் மூலம் பேசிய முஷராஃப், இந்த அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறியுள்ளார். போன் மூலம் பேசிய முஷராஃப், ‘ஜெய்ஷ் அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதை நான் வரவேற்கிறேன். அந்த அமைப்பு என்னையே 2 முறை கொல்லப் பார்த்தது' என்றார்.
அப்போது செய்தியாளர், ‘நீங்கள் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது ஏன் ஜெய்ஷ் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கவில்லை?' என்றதற்கு, ‘அப்போது சூழல் வேறு மாதிரி இருந்தது' என பதில் அளித்தார்.
மசூத் அசார் தலைமையில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, இந்தியா மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலுக்கு காரணமாக இருந்துள்ளது. கடைசியாக பிப்பரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கும் ஜெய்ஷ் அமைப்புதான் காரணம். அந்தத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.