This Article is From Jul 22, 2019

இந்த ஏரியில் குளித்தால் உடல்நிலை பாதிக்கும்- கதை இல்லைங்க உண்மைதான்!

இந்த எரியானது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது

இந்த ஏரியில் குளித்தால் உடல்நிலை பாதிக்கும்- கதை இல்லைங்க உண்மைதான்!

சமூக வலைதளங்களில் பலர் இந்த ஏரியில் குளிப்பது போன்ற படங்களைப் பதிவிட்டுள்ளனர். 

ஸ்பெயின் நாட்டில் இருக்கும் ‘மோன்டி நேமி' (Monte Neme) என்கிற ஏரி, இன்ஸ்டாகிராம் மூலம் உலக புகழ்பெற்றது. இந்த ஏரி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், பலரும் இங்கு வந்து குளித்து அதை புகைப்படமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இந்த ஏரியானது ஒரு நஞ்சுக் குட்டை. 

ஸ்பெயினில் இருக்கும் மான்டி நேமி, ஒரு காலத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்ததாக சொல்கிறது ‘யூரோ செய்தி'. ஆனால், அந்த நஞ்சு ஏரி பார்ப்பதற்கு சுத்தமாக நீல நிறத்தில் இருப்பது போன்று இருக்கும். அதற்குக் காரணம் அங்கு அதிகப்படியாக உள்ள ரசாயனங்களால் என்று சொல்லப்படுகிறது. மான்டி நேமிக்கு உள்ளூர்காரர்கள் “கலாஷியன் ஷெர்னோபிள்” என்று பெயரையும் வைத்துள்ளனர். 
 

இந்த எரியானது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. சமூக வலைதளங்களில் பலர் இந்த ஏரியில் குளிப்பது போன்ற படங்களைப் பதிவிட்டுள்ளனர். 

ஆனால், கடந்த வாரம் இந்த ஏரியில் குளித்த இரண்டு சுற்றுலா பயணிகள், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ‘இன்டிபெண்டன்ட்' செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பலருக்கும் இந்த ஏரியில் குளித்த பின்னர் தோள் அரிப்பு ஏற்பட்டுள்ளதாம். 
 

இது குறித்து ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம், புப்லிகோ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “அந்த ஏரியில் குளித்த பின்னர் எனக்கு வாந்தி வருவது போல ஆனது. என் தோளில் வந்த பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு நீடித்தது” எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

இந்த பிரச்னை குறித்து கோருனா பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மானுவல் ஃபெராரியோ, “மான்டி நேமியில் சிறிது நேரமே குளித்தால், தோள் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படும். வெகு நேரம் அங்கு குளிக்க நேர்ந்தால் வயிற்றுப் பிரச்னை, வாந்தி மற்றும் பேதி பிரச்னைகள் ஏற்படும்” என்று எச்சரிக்கிறார். 


 

Click for more trending news


.