This Article is From Mar 19, 2020

வைரல் வீடியோ: கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள டைனோசர் டிரஸ் போட்ட நபர்!!

சீனா, இத்தாலி மற்றும் ஈரானுக்குப் பிறகு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்பெயின்தான்.

வைரல் வீடியோ: கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள டைனோசர் டிரஸ் போட்ட நபர்!!

இதுவரை இந்த வீடியோ, 48 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் அதற்கு கருத்திட்டு வருகிறார்கள். 

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் போலீஸ், யாரும் வெளியில் வராமல் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய ரோந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு நபர், டைனோசர் உடை போட்டு வெளியில் திரிவதைப் பார்த்துள்ளார்கள். 

இது குறித்த வீடியோவை ஸ்பெயினின், முர்சியோ பகுதி போலீஸ் பகிர்ந்துள்ளனர். அதில், ஒரு நபர், குப்பைகளைத் தெருவில் இருக்கும் குப்பைத் தொட்டிக்குக் கொண்டு வந்து போடுவது தெரிகிறது. அப்போது அங்கு வரும் போலீஸ், அவரைப் பிடித்து விசாரிக்கின்றனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட நபரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

“இந்த இக்கட்டான நேரத்தில் செல்லப் பிராணிகளோடு ஒருவர் மட்டும் வெளியில் வர அனுமதியுண்டு. அதுவும் குறைந்த தூரத்துக்கு மட்டுமே நடக்கலாம். டைனோசர் வைத்திருந்தால் இந்த சலுகை பொருந்தாது,” என்று வேடிக்கையாக வீடியோவுக்கு கேப்ஷன் எழுதியுள்ளது போலீஸ். 

இதுவரை இந்த வீடியோ, 48 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் அதற்கு கருத்திட்டு வருகிறார்கள். 

“இது ஸ்பெயினில் மட்டும்தான் நடக்கும்,” என்கிறார் ஒரு ட்விட்டர் பயனர். இன்னொருவரோ, “உங்கள் ஊர், நகரம், மொத்த நாட்டுக்கும் தடை இருக்கும் போது, டைனோசருக்கும் பொருந்தும்,” என்று கேலி செய்கிறார். 

இன்னொரு ட்விட்டர் பயனர், இந்த டைனோசர் உடையின் நடமாட்டம் குறித்து இன்னொரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 
 

சீனா, இத்தாலி மற்றும் ஈரானுக்குப் பிறகு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்பெயின்தான். பல கட்டுப்பாடுகள் விதித்தபோதும் தொடர்ந்து ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

Click for more trending news


.