This Article is From May 11, 2020

சும்மா கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு… ஆனா எதையுமே எரிக்கல..! - வைரல் வீடியோ!

தற்போது படமாக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சும்மா கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு… ஆனா எதையுமே எரிக்கல..! - வைரல் வீடியோ!

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

ஒரு பூங்காவில் எரியும் நெருப்பு, எதையும் சேதப்படுத்தாமல் கொழுந்துவிட்டு எரியும் வீடியோ படுவைரலாக மாறி, பல லட்சம் பார்வைகளை அள்ளி வருகிறது. இந்த வீடியோவில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், பூங்காவில் எரியும் நெருப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும் மேற்பரப்பை மட்டும் எரித்துச் செல்கிறது. வெள்ளைப் பரப்பிற்குக் கீழிருக்கும் பச்சைப் புல்லுக்கு ஒன்றும் ஆகவில்லை. அதேபோல சுற்றியுள்ள மரம் மற்றும் பூங்காவின் அமரும் மேசைகளையும் அது எதுவும் செய்யவில்லை. 

ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது, Club De Montana Calahorra என்னும் தொண்டு நிறுவனத்தால் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனமான Cope, காலஹோரா என்னும் பூங்காவில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது என்றும் வெள்ளைப் பரப்பு அங்கு இருக்கும் போப்லர் மரத்தின் விதைகள் என்றும் தகவல் தெரிவித்துள்ளது. 

வீடியோவில் போப்லர் மரத்தின் விதைகளை மட்டும் எரித்துவிட்டுப் போகும் நெருப்பு, புல்லை அப்படியே விட்டுச் செல்வதுதான் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

வீடியோவைப் பார்க்க:

ஃபேஸ்புக் மட்டுமின்றி ரெடிட், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

ட்விட்டரில் மட்டும் இந்த வீடியோவுக்கு சுமார் 68 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. பலரும் ஆச்சரியத்தில் கருத்திட்டு வருகிறார்கள். 

காலஹோராவின் மேயரான எலிசா கரிடோவும், இது குறித்த வீடியோவைப் பகிர்ந்து, “பலரும் இந்த நெருப்பு கட்டுப்படுத்தப்பட்டதனால் இப்படி எரிகிறது என்று சொல்கிறார்கள். இது கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு அல்ல,” என தெளிவுபடுத்தியுள்ளார். 

ஸ்பெயின் நாட்டில் இதைப் போன்ற அதிசய தீப்பிடிப்பு சம்பவங்கள் அவ்வப்போது நடகுகமாம். இது மிகவும் ஆபத்தானது மற்றும் வேகமாக பரவக்கூடியது என்று தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது படமாக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

Click for more trending news


.