உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸில் சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னை சிகிச்சைக்காக தன்னை ஐதராபாத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

சிதம்பரத்திற்கு வயிற்றுவலி பாதிப்பு உள்ளது.

New Delhi:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐயின் கஸ்டடியில் இருந்து சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் அவர் தற்போது அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். 

சிதம்பரத்திற்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் உண்டு. இதனை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அவர், தன்னை மருத்துவ பரிசோதனைக்காக ஐதராபாத் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வயிற்று வலி பிரச்னை காரணமாக இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிதம்பரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக அவர், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

More News