This Article is From Sep 28, 2018

600 தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை; தொடரும் அட்டூழியம்..!

காயமடைந்த மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

600 தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை; தொடரும் அட்டூழியம்..!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600 மீனவர்கள், தங்கள் நீர்பரப்பில் மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டி, இலங்கை கடற்படை அவர்களை துரத்தி அடித்துள்ளது. மீனவர்களுக்குச் சொந்தமான வலைகளையும் கிழித்து அட்டகாசம் செய்துள்ளது இலங்கை கடற்படை.

கடந்த புதன் கிழமையின் பிற்பகுதியில் ராமேஸ்வரத்திலிருந்து 100 படகுகள் மூலம் 600 மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்கள் வலை போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படை அங்கு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள், மீனவர்களை துரத்தி அடித்துள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து மீனவச் சங்கத்தைச் சேர்ந்த சேசுராஜா, ‘எங்கள் கடற்கரை எல்லைக்குள் வர வேண்டாமென்று உங்களுக்கு நாங்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளோம் என்று கூறி, இலங்கை கடற்படையினர் 10 வலைகளை கிழித்து எறிந்தனர். மேலும், நாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பலவந்தமாக பிடிங்கிச் சென்றனர்’ என்று கூறினார்.

இது ஒருபுறமிருக்க நாகப்பட்டிணத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை, கொள்ளையர்கள் மடக்கி அவர்களிடமிருந்து உடைமைகளை பறித்துச் சென்றுள்ளனர். அவர்கள், மீனவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.