This Article is From Nov 30, 2019

''இந்தியாவுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன்'' - கோத்தபய ராஜபக்சே உறுதி!!

இலங்கை தேர்தல் முடிவின்படி கோத்தபய ராஜபக்சே கடந்த 18-ம்தேதி அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த 3 நாட்களில் தனது சகோதரர் மகிந்தா ராஜபக்சேவை அவர் பிரதமராக அறிவித்தார்.

''இந்தியாவுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன்'' - கோத்தபய ராஜபக்சே உறுதி!!

கோத்தபயவின் இந்த பேட்டியின்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

New Delhi:

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாக இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். 

இந்தியாக்குவ வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாட்கள் பயணமாக கோத்தபய இந்தியா வந்துள்ளார். 

தனது இந்தியப் பயணம் குறித்து கோத்தபய ராஜபக்சே கூறியிருப்பதாவது-

எனது அதிபர் பதவிக் காலத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இருக்கக்கூடிய உறவை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நான் விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இரு நாடுகள் நீண்ட கால உறவில் இருந்திருக்கின்றன. 

பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒன்றுபட்டு பணியாற்றுவது அவசியமாக உள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். கோத்தபயவின் இந்த பேட்டியின்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மகிந்தா ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோது, கோத்தபய ராஜபக்சே ராணுவ அமைச்சராக இருந்தார். அப்போதுதான் இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கை தேர்தல் முடிவின்படி கோத்தபய ராஜபக்சே கடந்த 18-ம்தேதி அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த 3 நாட்களில் தனது சகோதரர் மகிந்தா ராஜபக்சேவை அவர் பிரதமராக அறிவித்தார். 

.