This Article is From Aug 01, 2020

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,000-ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை அடைவதற்கு 183 நாட்கள் எடுக்கிறது.

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,000-ஐ கடந்தது!
New Delhi:

இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,118ஆக பதிவாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 16,95,988ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஒரே நாளில் 764 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 36,511ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டிய 3 நாட்களில் 16 லட்சத்தை பாதிப்பு எண்ணிக்கை அடைந்துள்ளது. இதுவரை 10.94 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குணமடைபவர்களின் விகிதமானது 64.52 ஆக உள்ளது. இந்தியாவில் 1,93,58,659 மாதிரிகள் இதுவரை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை அடைவதற்கு 183 நாட்கள் எடுக்கிறது. நாட்டில் சுமார் 130 கோடி மக்கள் தொகை உள்ளது மற்றும் ஒரு நோயாளி குணமடையும் வரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசோதிக்கப்படலாம்.

நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கை மற்றும் மொத்த பாதிப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கை ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது. உலகின் கடுமையான ஊரடங்கான ஒன்றை அரசு தளர்த்திய பின்னர், இந்த தொற்று பரவுவது குறைவதாக, மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. 

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 11,000 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,11,798 ஆக உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு எண்ணிக்கை அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளன, அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 2,39,978 பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

ஆந்திர பிரதேசம் டெல்லியை விஞ்சி நாட்டின் மூன்றாவது மோசமான கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறது. கடந்த மூன்று நாட்களில் 30,000க்கும் மேற்பட்ட வழக்குகள் அங்கு பதிவாகியுள்ளது. இதனால், அந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,933 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 2,496 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,000-ஐ தாண்டியது. 45 உயிரிழப்புகளும் மாநிலத்தில் பதிவாகியுள்ளன, இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,581 ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாநில தலைநகர் கொல்கத்தா 21 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 

.