This Article is From Jul 25, 2019

இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 1.5 கிலோ நகைகள், நாணயங்கள்!

26 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து ரூ.5 மற்றும் ரூ.10 மதிப்பிலான 90 நாணயங்கள், செயின், கம்மல், வளையல், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 1.5 கிலோ நகைகள், நாணயங்கள்!

பல சோதனைகளை தொடர்ந்து, பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

Rampurhat:

மேற்குவங்க மாநிலம் பிர்பஹம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ மதிப்பிலான நகைகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ராம்பூர்ஹாத் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவர் ஒருவர் கூறும்போது, 26 வயதிலான அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து ரூ.5 மற்றும் ரூ.10 மதிப்பிலான 90 நாணயங்கள், செயின், கம்மல், வளையல், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் இதுபோல 90 நாணயங்கள் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த ஆபரணங்கள் பெரும்பாலும் செம்பு மற்றும் உலோகத்திலானதாக உள்ளன. சில தங்க நகைகள் அகற்றப்பட்டுள்ளன. 

அந்த பெண்ணின் தாயார் அளித்த தகவலின்படி, அந்த நகைகள் அனைத்தும் அவர்களது வீட்டில் இருந்து காணாமல் போனதாகும். இதேபோல், நாணயங்கள் அனைத்தும் அந்த பெண்ணின் சகோதரரின் கடையில் இருந்து அவர் எடுத்திருப்பார் என்று அவர் கூறினார். 

நகைகள், ஆபரணங்கள் காணாமல் போனதை தொடர்ந்து நாங்கள் அவளிடம் கேள்வி எழுப்பினோம், ஆனால் அதற்கு பதிலளிக்காமல் அவள் அழ ஆரம்பித்தாள். அவளை தொடர்ந்து நாங்கள் கண்காணித்தே வந்தோம், எனினும், எங்களுக்கு தெரியாமல் அவள் இவ்வளவு பொருட்களையும் விழுங்கி வந்துள்ளார். 

கடந்த இரண்டு நாட்களாக அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால், நாங்கள் அவளை பல தனியார் மருத்துவர்களிடம் அழைத்துச்சென்றோம். எனினும் எதுவும் தெரியாமல் சிகிச்சையும் பெற்று வந்தார் என்று அவர் கூறினார். 

இதற்கு பின்னரே பல்வேறு பரிசோதனைகளை தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அவரது வயிற்றில் இருந்த அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. 

.