This Article is From Oct 23, 2018

சத்தீஸ்கர் தேர்தல்: ரமண் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் உறவினரை களமிறக்கும் காங்கிரஸ்!

கருணா சுக்லா, சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக-விலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சத்தீஸ்கர் தேர்தல்: ரமண் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் உறவினரை களமிறக்கும் காங்கிரஸ்!

சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12-ல் நடக்க உள்ளது

New Delhi:

சத்தீஸ்கர் மாநில தேர்தலில் முதல்வர் ரமண் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் உறவுப் பெண் கருணா சுக்லாவை களமிறக்க உள்ளது காங்கிரஸ். ரமண் சிங், ராஜ்நந்த்கோன் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளார். அவருக்கு எதிராக கருணா சுக்லா போட்டியிடுவார் என்று தெரிகிறது.

சத்தீஸ்கரில் நடக்க உள்ள முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை 2 கட்டங்களாக காங்கிரஸ் வெளியிட்டது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், இன்று மீதமுள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12-ல் நடக்க உள்ளது. முதற்கட்டத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 23-ம் தேதியே கடைசி நாள். 

கருணா சுக்லா, சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக-விலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.