‘யார் முதல்வராக வேண்டும்!’- காங்கிரஸ் தொண்டர்களுக்கு ரகசிய ஆடியோ அனுப்பிய ராகுல்

மத்திய பிரதேசம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கும் நிலையில் இருக்கிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS

நேற்று முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து பேசிய ராகுல், ‘யார் முதல்வராக பொறுப்பேர்ப்பார் என்பது குறித்து ஒரு குழப்பமும் இருக்காது. அது சுமூகமாக நடக்கும்’ என்று கூறினார்.


New Delhi: 

மத்திய பிரதேசம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கும் நிலையில் இருக்கிறது. ஆனால், இரு மாநிலங்களிலும் யார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இதை சரிகட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 7.3 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஒரு ரகசிய ஆடியோ அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், ‘நான் ராகுல் காந்தி பேசுகிறேன். முதல்வராக யார் வர வேண்டும் என நீங்கள் நினைக்கறீர்கள்?' என ராகுல் கேட்கிறார். இதற்கு ரிப்ளை கொடுக்கும் பட்சத்தில் அது ரகசியமாக வைக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

ஆடியோ பதிவில் ராகுல், ‘சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆட்சி பொறுப்புக்கு அழைத்து வந்ததற்கு தொண்டர்களாகிய உங்களுக்கு நன்றி. இப்போது மிக முக்கியமான கேள்விக்கு வருகிறேன். யார் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஒரேயொரு பெயரை மட்டும் சொல்லுங்கள். பீப் சத்தத்திற்குப் பிறகு நீங்கள் பெயரைச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் பதில் எனக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியப்படுத்தப்படாது' என்று கூறுகிறார். 

காங்கிரஸ் தரப்பினர் இந்த முன்னெடுப்பு குறித்து தெரிவிக்கையில், ‘இரு மாநிலங்களிலும் யார் முதல்வராக வர வேண்டும் என்பதில், இந்த ஆடியோ மூலம் ஒரு முடிவுக்கு வர முடியும். ஏற்கெனவே யார் முதல்வராக தொண்டர்கள் விருப்படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது' என்றனர்.

தேர்தலுக்கு முன்னரும் காங்கிரஸ் கட்சி, எந்த மாநிலத்துக்கு முதல்வர் வேட்பாளரை தெரிவிக்கவில்லை. முதலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், பல்வேறு கோஷ்டிகளாக கட்சிக்குள்ளே பிரிந்து கிடக்கும் காங்கிரஸிலிருந்து, தற்போது ஒரு முதல்வரை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் சிக்கலான காரியம் என்றுதான் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜஸ்தானில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் சச்சின் பைலடுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மூத்தவர் என்ற முறையிலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தும் பார்க்கும் போது, கெலோட்டுக்கும் முதல்வராக மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில், கமல்நாத்துக்கும் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையில் முதல்வர் ஆவதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கரிலும், பல்வேறு பெயர்கள் அடிபடுகின்றன. 

நேற்று முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து பேசிய ராகுல், ‘யார் முதல்வராக பொறுப்பேர்ப்பார் என்பது குறித்து ஒரு குழப்பமும் இருக்காது. அது சுமூகமாக நடக்கும்' என்று கூறினார். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................