அதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை சேர்ந்த டிக்டாக் பிரபலம்! - வீடியோ

2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சோனாலி போகாட் படுதோல்வியுற்றார். இவர் நேற்றைய தினம் உழவர் சந்தையை ஆய்வு செய்தார்.

அதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை சேர்ந்த டிக்டாக் பிரபலம்! - வீடியோ

ஹைலைட்ஸ்

  • அதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை சேர்ந்த டிக்டாக் பிரபலம்!
  • அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது
  • அதிகாரி, சோனாலி போகாட் இருவருக்கும் எதிராகவும் போலீஸார் வழக்குப் பதிவு
New Delhi:

டிக்டோக் பிரபலமும், பாஜக பெண் தலைவருமான சோனாலி போகாட், தன்னை தவறாக பேசியதாக அதிகாரி ஒருவரை பொது இடத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது

2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சோனாலி போகாட் படுதோல்வியுற்றார்.  இவர் நேற்றைய தினம் உழவர் சந்தையை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் குறை தொடர்பாக ஹிசாரில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்திக்க புகார் பட்டியலுடன் சென்றார். அங்கு அவர், ஆட்சேபனைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். 

இதில், ஆத்திரமடைந்த போகாட், அதிகாரியை அடித்து துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து, தனது செருப்பால் அவர் அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, அந்த அதிகாரி அவரது புகார்களை ஏற்றுக்கொள்வதாகவும், அவற்றைத் தீர்த்து வைப்பதாகவும் கூறி, சோனாலியிடம் மன்றாடுகிறார்.

இதைத்தொடர்ந்து, சோனாலி போகாட் போலீசாரிம் புகார் தெரிவித்துள்ளார். இதில், அதிகாரி, சோனாலி போகாட் இருவருக்கும் எதிராகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, என்னை பார்த்து பேசுங்கள் என்றார். என்னை தெரியுமா என்றார். ஆம் தெரியும் நீங்கள் ஆதம்பூரில் தேர்தலில் பேட்டியிட்டீர்களே என்று கூறினேன். உங்களது புகார்களை ஏற்றுக்கொண்டேன். அவற்றை தீர்த்து வைக்கிறேன் என்று கூறினேன். பின்னர் அவர் என்னிடம்  தேர்தலில் என்னை ஏன் புறக்கணித்தீர்கள்? என்று கேட்டார். 

அதற்கு நான், ஆதம்பூரில் எனக்கு குடும்பம் இல்லை, பின்னர் உங்களது தொகுதியில் நான் எப்படி வாக்களிக்க முடியும்.. தேர்தல் முடிந்து இவ்வளவு நாட்கள் கழித்து நீங்கள் என்னை குற்றம்சாட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர், நீ என்னிடம் தவறாக பேசுகிறாய் என்றார். நான் அப்படி எதுவும் பேசவில்லை என்றேன். அப்போது, திடீரென அவர் என்னை சரமாரியாக அடிக்க துவங்கியதாக கூறியுள்ளார்.  

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சோனாலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரைக் கேட்டுக்கொண்டார்.