உண்மையில் அவை சண்டையிடவில்லை

இனப்பெருக்க காலங்களில் இந்த கரோட்டினாய்டினை பாலாகக் குஞ்சுகளுக்குக் கொடுத்துவிடுவதால் பெற்றோர் பூ நாரைகள் தங்கள் இளஞ்சிவப்பு நிறத்தினை வெகுவாக இழந்து காணப்படும். 

உண்மையில் அவை சண்டையிடவில்லை

A video that appears to show two flamingos fighting was shared on Twitter.

இந்திய வன சேவை அதிகாரி பர்வீன் கஸ்வான் பெரும்பாலும் வன உயிரினங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் செய்திகளோடு நுட்பத்துடன் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கஸ்வான் டிவிட்டருக்கு அற்புதமான ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், பூ நாரை பறவைகள் இரண்டு ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்வதைப் போன்று காணப்படுகின்றது. ஆனால், உண்மையில் அவை சண்டையிடவில்லை. அவை தங்களது குஞ்சுக்கு உணவளிக்கின்றன என்று கஸ்வான் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். 

பூ நாரைகள் பொதுவாக தங்களுடைய செரிமான பகுதிகளில் ஒருவித திரவத்தினை சுரக்கின்றன. இது அந்த பறவைகளின் குஞ்சுகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு பூ நாரைக் குஞ்சுகள் வளர்கின்றன. எளிமையான மற்றும் எளிதில் செரிமானமாகிற உணவாக இந்த பால் இருக்கிறது. இதில் புரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உயிரணுக்கள் உள்ளது. இந்த பாலைதான் பெற்றோர் பூ நாரை அதனுடைய குஞ்சுக்குக் கொடுக்கின்றது. இவ்வகை பறவைகளின் தொண்டைகளுக்கு இடையே காணப்படக்கூடிய தசைநார் பை அலிமன்டரியின் ஒரு பகுதியாகும். .

பொதுவாக பூ நாரைகள் ஒட்டு மீன்கள் போன்ற உணவிலிருந்து கரோட்டினாய்டை எடுத்துக்கொள்கிறது. இதன் மூலமாக இவை தங்களின் தனித்துவமாக இளஞ்சிவப்பு நிறத்தினை பெறுகிறது. இருப்பினும் இனப்பெருக்க காலங்களில் இந்த கரோட்டினாய்டினை பாலாகக் குஞ்சுகளுக்குக் கொடுத்துவிடுவதால் பெற்றோர் பூ நாரைகள் தங்கள் இளஞ்சிவப்பு நிறத்தினை வெகுவாக இழந்து காணப்படும். 

குஞ்சுகள் சொந்தமாக உணவினை எடுத்துக்கொள்ளத் தொடங்கியதும் பெற்றோர் பூ நாரைகள் தங்களது தனித்துவமான இளஞ்சிவப்பு நிறத்தினை பெறுகின்றன. 

35 ஆயிரம் பார்வையாளர்களைக் கவர்ந்த இந்த வீடியோவானது, பலரின் பரவலான கருத்துகளையும் பெற்றிருக்கிறது. “இயற்கையின் அதிசயங்கள் ஒருபோதும் நம்மை ஏமாற்றாது.” என்றும் தன்னுடைய மனதினை இந்த வீடியோவில் பறிகொடுத்ததாகவும் மற்றொரு டிவிட்டர் பயனாளிகளும் கருத்துகளைப் பகிர்ந்திருக்கின்றார்கள். 

இம்மாத தொடக்கத்தில் ஒரு மானிடர் பல்லிக்கும், சிறுத்தைக்குமான சண்டைக்காட்சிகளை வீடியோவாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Listen to the latest songs, only on JioSaavn.com