This Article is From Jun 25, 2020

தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆர்.பி.உதயக்குமார்

மக்கள் எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தளர்வுகளை முறையாக கையாளவேண்டும்.

தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆர்.பி.உதயக்குமார்

தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆர்.பி.உதயக்குமார்

ஹைலைட்ஸ்

  • தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை
  • குணமடைந்து சென்றவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
  • தளர்வுகளை முறையாக கையாளவேண்டும்.

தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதனால், நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதனிடையே, மதுரையிலும் தொற்று பரவல் அதிகமாக காணப்பட்டதால் அங்கும் சென்னையை போல், 24ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கும் குடும்ப அரசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, மதுரையில் தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் வரை அங்கு 1073 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 641 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 423 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது அவசியமற்றது. தொற்றில் இருந்து எத்தனை பேர் காப்பாற்றப்படுகிறோம் என்பதைப் பார்க்கவேண்டும். குணமடைந்து சென்றவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.

மக்கள் எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தளர்வுகளை முறையாக கையாளவேண்டும். மாவட்ட எல்லைப் பகுதிகளில் தேவையான மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. ஆனாலும், சோதனைச் சாவடிகளை தாண்டி வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதிக்க வேண்டும். 

மேலும், அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து, மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.