ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சோகம்!! நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு!!

மும்பையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் ஞாயிறன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சோகம்!! நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு!!

பிரசவம் முடிந்த சில மணி நேரங்களில் நடிகை பூஜா ஸூன்ஜார் உயிரிழந்தார். (Representational)

Mumbai:

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் கிடைக்காததால் 25வயது மராத்தி நடிகையும், அவரது பிறந்த குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக நடிகை பூஜா ஸூன்ஜாரின் உறவினர்கள் கூறும்போது, சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் அவரை உயிருடன் காப்பாற்றி இருக்கலாம் என்றனர். 

மும்பையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் ஞாயிறன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, நள்ளிரவு 2 மணி அளவில், ஸூன்ஜாருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அருகில் சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. எனினும், சிறுது நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது. 

தொடர்ந்து, சுகாதார மைய மருத்துவர்கள் அவரை கோரேகானில் இருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ஹிங்கோலி சிவில் மருத்துவமனைக்கு மாற்றுமாறு குடும்ப உறுப்பினர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் கிடைக்க நீண்ட நேரம் போராடியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். எனினும், ஸூன்ஜார் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மராத்தியில் 2 திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை பூஜா ஸூன்ஜார். அவர் கர்ப்பமாக இருந்ததன் காரணமாக சிறுது காலம் அவர் திரைத்துறையில் இருந்த ஓய்வில் இருந்து வந்தார்.  
 

More News