This Article is From Feb 21, 2019

பாகிஸ்தானுக்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த முடிவு! - இந்தியா அதிரடி!

ஜம்மூ - காஷ்மீரின் புல்வாமாவில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்

இந்தியா-பாகிஸ்தானை இடையேயான நதிநீர் பங்கீட்டினை நிறுத்த முடிவு.

New Delhi:

இந்தியா-பாகிஸ்தானை இடையேயான நதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதி உள்ளிட்ட 3 நதிகளின் நீரை தடுத்து இந்தியாவின் யமுனை ஆற்றை வளப்படுத்த பயன்படுத்தப்போவதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நதிநீர் பங்கீட்டினை தடுத்து நிறுத்தி அதனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அங்கிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரியை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

.