This Article is From Jan 02, 2019

சென்னை: புத்தாண்டு விபத்துகளில் 7 பேர் உயிரிழப்பு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட விபத்துகளில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தன

சென்னை: புத்தாண்டு விபத்துகளில் 7 பேர் உயிரிழப்பு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட விபத்துகளில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கார்கள், பைக்குகள் மோதிய விபத்துகளில் 200-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் புத்தாண்டை சிறப்பாக வரவேற்கும் வகையில் தடையில்லா வாகன போக்குவரத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்க எற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக சுமார் ஆயிரம் இடங்களில் இரும்பு தடுப்புகளும், 150-க்கும் அதிகமான இடங்களில் வாகன சோதனை சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 97 இடங்களில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே பஸ் - பைக் மோதிய விபத்தில் 2 பேரும், அடையாறு அருகே நடந்த விபத்தில் 2 பேரும், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நடந்த விபத்துகளில் 3 பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்ட விபத்துகளில் 234 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.