தனியார் வேலைவாய்ப்புகளை பெற தமிழக அரசு தொடங்கிய புதிய இணையதளம்!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தனியார் வேலைவாய்ப்புகளை பெற தமிழக அரசு தொடங்கிய புதிய இணையதளம்!

தொடர்ச்சியாக போடப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவுகளால் பல தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற தமிழக அரசு புதிய இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளது. 

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இளைஞர்களே,நீங்கள்தான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி! 

தனியார் நிறுவனங்களில் உங்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற அம்மா அரசு http://tnprivatejobs.tn.gov.in என்ற இணையவாயிலை உருவாக்கி உள்ளது.

இவ்வாய்ப்பினால், தங்கள் திறனுக்கேற்ற வேலை கிடைத்து,வளமான வாழ்வை  பெற வாழ்த்துக்கள்.' என்று பதிவிட்டுள்ளார். 

Newsbeep

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் தொடர்ச்சியாக போடப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவுகளால் பல தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இப்படியான சூழலில் இந்த இணையதளம் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனப்படுகிறது.