This Article is From Feb 01, 2019

சிபிஐ புதிய இயக்குனர் நாளை தேர்வு செய்யப்படுகிறார்

பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சிபிஐ புதிய இயக்குனரை தேர்வு செய்கிறது

சிபிஐ புதிய இயக்குனர் நாளை தேர்வு செய்யப்படுகிறார்

கடந்த முறை ஜனவரி 24-ம்தேதி கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சிபிஐ புதிய இயக்குனரை நாளை தேர்வு செய்கிறது. இந்தக் குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் தேர்வு செய்கின்றனர்.

கடந்த முறை  ஜனவரி 24-ம்தேதி சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நாளை தேர்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் தேசிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

.