This Article is From Jun 04, 2018

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

 இந்திய அளவில் மருத்துவ படிப்புக்குச் சேர்வதற்காக எழுதப்பட்ட நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது சி.பி.எஸ்.இ

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

சிபிஎஸ்இ-ன் அதிகாரபூர்வ இணையத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

ஹைலைட்ஸ்

  • சிபிஎஸ்இ இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
  • சீக்கிரமே கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது
  • 13 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினர்
New Delhi:  இந்திய அளவில் மருத்துவ படிப்புக்குச் சேர்வதற்காக எழுதப்பட்ட நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது சி.பி.எஸ்.இ.

நீட் 2018 தேர்வு முடிவுகள், சி.பி.எஸ்.இ-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. பொதுப் பிரிவில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பு 691- 119 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

neet result 2018, cbse neet result, neet ug result 2018

முன்னர், இன்று மதியம் 2 மணி அளவில் நீட் 2018 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சீக்கிரமே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்குக் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் கூடிய விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும். 

இந்த ஆண்டு நீட் தேர்வை மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஆண் மாணவர்களை விட 2 லட்சம் பெண் மாணவர்கள் நீட் தேர்வில் அதிகமாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, `நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தடை விதிக்க முடியாது' என்று கூறிவிட்டது நீதிமன்றம்.

.