டெல்லி வன்முறையில் NDTV செய்தியாளர்கள், கேமரா மேன் மீது சமூக விரோதிகள் தாக்குதல்!!

டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் தற்போது வரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி வன்முறையில் NDTV செய்தியாளர்கள், கேமரா மேன் மீது சமூக விரோதிகள் தாக்குதல்!!

சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் யாரும் இல்லையென தகவல் தெரிவிக்கின்றன.

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் NDTV செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது
  • சி.ஏ.ஏ. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 9 பேர் உயிரிழப்பு
  • கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசனை
New Delhi:

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் NDTV செய்தியாளர்கள் 3 பேர், கேமரா மேன் ஒருவர் ஆகியோர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது போலீசார் யாரும் அங்கே இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NDTV செய்தியாளர் அரவிந்த் குணசேகரை வன்முறைக் கும்பல் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியது. அவரை சக செய்தியாளரான சவுரப் சுக்லா மீட்க முயன்றபோது வன்முறை கும்பல் தடியால் கடுமையாகத் தாக்கியது. 

அரவிந்தை மீட்க முயன்றபோது சவுரபிற்கும் தடியடி நடந்துள்ளது. அவரது முதுகில் சிலர் குத்தியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலின்போது அரவிந்த்துடைய பற்கள் உடைந்துள்ளன. 

பின்னர் வன்முறைக் கும்பலிலிருந்து ஒருவழியாகச் செய்தியாளர்கள் தப்பியுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர். 

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் சீனிவாசன் ஜெயினுடன் மரியம் ஆல்வி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, மரியம் ஆல்வி மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதேபோன்று கேமரா மேன் சுஷில் ரதீக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.

NDTV பணியாளர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். ஆனால், டெல்லியில் வன்முறைக் கும்பல் ஏற்படுத்தியிருக்கும் கலவரம் பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. தற்போது கூடுதல் போலீசார் டெல்லியில் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கிய தேவை.