பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

முதலமைச்சர் அமரேந்தர் சிங்குடன் பகிரங்கமாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமைச்சரவை மறுசீரமைப்பில் முக்கிய அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

ஜூன் 10 தேதியன்று தனது ராஜினாமா கடிதத்தின் நகலை ராகுல் காந்தியிடம் சமர்பித்துள்ளார்.


Chandigarh, Punjab: 

கடந்த மாதம் பஞ்சாபில் அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்ட பின்னர் தனது புதிய அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்காத காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று மாநில அமைச்சரவையிலிருந்து விலகியதாக அறிவித்தார். முதலமைச்சர் அமரேந்தர் சிங்குடன் பகிரங்கமாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமைச்சரவை மறுசீரமைப்பில் முக்கிய அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்.

ஜூன் 10 தேதியன்று தனது ராஜினாமா கடிதத்தின் நகலை ராகுல் காந்தியிடம் சமர்பித்துள்ளார். “பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

“என்னுடைய ராஜினாமவை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் டெல்லியில் சந்தித்த பின்னர் ட்விட் செய்துள்ளார். 
“காங்கிரஸ் ஜனாதிபதியை சந்தித்து எனது கடிதத்தை கொடுத்துள்ளேன்” என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின்போது சித்துவின் மனைவிக்கு சீட் தர முதல்வர் அமரேந்தர் சிங் சண்டிகர், அமிர்தசரஸ் தொகுதியில் மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையிலான பிளவு அதிகரித்தது.

sc2mn38g

கடந்த ஜூன்மாதம் 6-ம் தேதி அமைச்சரவை மாற்றப்பட்டபோது சித்துவிடமிருந்த சுற்றுலாத்துறை, கலாச்சாரத்துறை பறிக்கப்பட்டு எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................