This Article is From Apr 04, 2019

'முதலில் நாடு, அடுத்தது கட்சி, கடைசிதான் என்னுடைய நலன்கள்' : அத்வானி கருத்தால் பரபரப்பு!!

Lal Krishna Advani: பாஜகவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அத்வானிக்கு அவர் வழக்கமாக போட்டியிடும் காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்படவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LK Advani Blog: பாஜகவில் உட்கட்சி ஜனநாயகம் இருப்பதாக அத்வானி தெரிவித்துள்ளார்.

New Delhi:

மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக (BJP) மூத்த தலைவர் அத்வானிக்கு (L. K. Advani) வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், பாஜகவில் உட்கட்சி ஜனநாயகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

பாஜக (Bharatiya Janata Party) மூத்த தலைவர் அத்வானி (Lal Krishna Advani) வழக்கமாக குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவார். ஆனால் இந்த தேர்தலில் அவர் அங்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அத்வானிக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.  இதனால் அத்வானி இடத்தை அமித் ஷா பிடித்து விட்டார் என்பது போன்று பேசப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து அத்வானி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கட்சி விவகாரம், தொகுதி ஒதுக்காதது உள்ளிட்டவை குறித்து அத்வானி விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் 'முதலில் நாடு, அடுத்தது கட்சி, கடைசிதான் என்னுடைய நலன்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

ஜனநாயகத்தை பாதுகாப்பது மற்றும் ஜனநாயக பாரம்பரியங்கள் உள்ளிட்டவை கட்சியிலும் இருக்கிறது. மத்திய அரசு ஆட்சி செய்யும் இந்தியாவிலும் இருக்கிறது. இதனால் பாஜகவை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். 

நமது ஜனநாயகத்தின் அடிப்படை என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பு மிக்க பண்புக்கு மதிப்பு அளிப்பதாகும். இந்திய தேசிய என்ற அளவில் நாட்டுக்கு எதிரானவர்கள் எவரையும் நாங்கள் ஆதரிப்பது கிடையாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அத்வானி (LK Advani) சமாதான நிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

.