This Article is From May 16, 2019

சந்திராயன் 2-ல் இலவசமாக பயணிக்கும் நாசாவின் பேலோட்!

இந்த சந்திராயன் 2 செயற்கைகோள், 3.8 டன் எடையை கொண்டுள்ளது. இந்த செயற்கைகோள் மொத்தமாக 800 கோடி ரூபாய் பொருட் செலவில் விண்ணில் ஏவப்படவுள்ளது.

சந்திராயன் 2-ல் இலவசமாக பயணிக்கும் நாசாவின் பேலோட்!

நாசாவின் செயற்கைகோளை இலவசமாக விண்ணிற்கு கொண்டு செல்ல இருக்கிறது, இந்தியாவின் இரண்டாவது சந்திர செயற்கைகோள்

New Delhi:


 ஜூலை மாதம் விண்ணில் பாயவுள்ள இந்தியாவின் இரண்டாவது சந்திர விண்கோளான சந்திராயன் 2 செயற்கைகோள், நாசாவின் ஒரு ஆராய்ச்சி ஒன்றையும் ஏந்தி விண்ணில் பாயவுள்ளது. 13 இந்தியாவை சேர்ந்த பேலோட்கள் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு ஆராய்ச்சி பேலோட் ஒன்றையும் ஏந்தி விண்ணில் பாயவுள்ளது இந்த ஏவுகணை.

இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அமைப்பு புதன்கிழமையான நேற்று அறிவித்துள்ளது. மேலும், இதை இஸ்ரோ அமைப்பு, நாசாவிற்கு இலவசமாக செய்து தரப்போகிறது. இந்த ஒரு பேலோடிற்காக, இஸ்ரோ நிறுவனம், நாசா நிறுவனத்திடம் எந்த ஒரு தொகையும் வசூலிக்கவில்லை.

இதுகுறித்து, இஸ்ரோவின் தலைவர் கே சிவன் கூறுகையில்,"நாங்கள் இந்த அமெரிக்க கருவிக்கு எந்த ஒரு தொகையும் விதிக்கவில்லை, ஒரு நட்பு ரீதியானம் முறையில் இலவசமாக செய்து தருகிறோம்." என கூறியுள்ளார். 

அமெரிக்காவை சேர்ந்த தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் என்னும் நாசாவின் இந்த "லேசர் ரெட்ரோ ரிஃப்லெக்டர்" என்னும் கருவி, இந்த விண்கோளின் லேண்டர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டார், லேண்டர்(விக்ரம்) மற்றும் ரோவர் (ப்ரகியன்) என்று மூன்று பகுதிகளை கொண்டுள்ள இந்த சந்திராயன் 2 செயற்கைகோளில், இந்தியாவை சேர்ந்த பேலோட்கள் மொத்தமாக 13 வைக்கப்பட்டுள்ளது. அதில் 8 ஆர்பிட்டாரிலும், 3 லேண்டரிலும், 2 ரோவரிலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி குறித்து இஸ்ரோ கூறுகையில், நாசாவின் இந்த கருவி ஒரு செயலற்ற கருவி என்பதால் எந்த ஒரு சக்தியும் இதற்கு அளிக்கத் தேவையில்லை. மேலும் நாசா நிறுவனம், பூமியிலிருந்து அனுப்பபடும் லேசர் கதிர்களை பாயச்செய்யவே இந்த கருவியை பயன்படுத்தவுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது. அந்த ரிஃப்லெக்டரில் உள்ள சிறப்பு கண்ணாடியின் மூலம், அந்த லேண்டருக்கும் பூமிக்கும் இடையே உள்ள துல்லியமான தூரத்தை அமெரிக்க ஆய்வாளர்களால் அறிய முடியும்.

நாசாவின் ஜேம்ஸ் ப்ரிடென்ஸ்டைன்(James F Bridenstine) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையிலான குழு, கடந்த மார்ச் 29 அன்று இந்தியாவின் இரண்டாவது சந்திர செயற்கைகோளில் இந்த கருவியினை பொருத்தியுள்ளனர். 
 

nq6pjogc

இந்த சந்திராயன் 2 செயற்கைகோள், 3.8 டன் எடையை கொண்டுள்ளது. இந்த செயற்கைகோள் மொத்தமாக 800 கோடி ரூபாய் பொருட் செலவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைகோளில் பொருத்தப்படவுள்ள அனைத்து பகுதிகளும் தயாராகிக்கொண்டுள்ளது என்றும், இந்த ஆண்டு ஜூலை 9-ல் இருந்து ஜூலை 16-ற்குள் விண்ணில் ஏவப்படலாம் எனவும், அதில் நிலவில் செப்டம்பர் 6-ஆம் நாள் தரையிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இந்த இஸ்ரோ விண்வெளி நிறுவனம் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தது. 


''ஜி எஸ் எல் வி'' எம் கே-III எவுகணையில் வைத்து விண்ணில் ஏவப்படவுள்ள இந்த சந்திராயன் 2 விண்கலத்தில், ஆர்பிட்டார் மற்றும் லேண்டர் ஆகிய பகுதிகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து இந்த ஏவுகணையுனுள் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ரோவர் பகுதி, லெண்டர் பகுதியினுள்ளேயே ஒரு பகுதியாக பொருத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சந்திராயன் 1 2008ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 11 பேலோட்களை கொண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த சந்திராயன் 1-ல், 5 இந்திய, 3 ஐரோப்பிய, 2 அமெரிக்க, 1 பல்கேரிய பேலோட்கள். 1.4 டன்கள் எடை கொண்டிருந்த சந்திராயன் 1, பி எஸ் எல் வி ஏவுகணை மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.  இந்த சந்திராயன் 1 நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. இந்த கண்டுபிடிப்பு நிலவின் புவியியல் வரலாறு மற்றும் அதன்மேல் கொண்டுள்ள பார்வையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த "லேசர் ரெட்ரோ ரிஃப்லெக்டர்" கருவியை பல முறை நிலவிற்கு அனுப்பியுள்ள நாசா நிறுவனம், பலமுறை அப்பொலோ விண்கலங்களை இதற்காக பயன்படுத்தியுள்ளது. சமீபத்தில், இந்த ஆண்டின் ஏப்ரல் 11 அன்று நிலவிற்கு ஏவப்பட்ட இஸ்ரேலிய விண்கலத்தில்கூட இந்த மாதிரியான கருவியை பொருத்தி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இதை பூமிக்கும் நிலவிற்கும் இடையேயான துல்லியமான தூரத்தை அளக்கவே விண்ணிற்கு ஏவி வருகிறது நாசா நிறுவனம்.

.