This Article is From Nov 12, 2019

திருமண வரவேற்பில் அதி நவீன துப்பாக்கிகளுடன் நின்ற மணமக்கள்

மணமக்கள் இருவரின் கையிலும் ஏ.கே56 மற்றும் எம். 16 ரக அதி நவீன தானியங்கி இயந்திர துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டிருந்த புகைப்படம் வைரலாக பரவியுள்ளது

திருமண வரவேற்பில் அதி நவீன துப்பாக்கிகளுடன் நின்ற மணமக்கள்

மணமகன் மற்றும் மணமகளின் பெயர்கள் உடனடியாகத் தெரியவில்லை.

Guwahati:

நாகலாந்தில் கிளர்ச்சி அமைப்பு தலைவர் மகன் திருமண வரவேற்பில் அதி நவீன துப்பாக்கிகளுடன் மணமக்கள் காட்சியளித்தனர்.

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் நாகாலாந்து சோஷியலிஷ்ட் கவுன்சில் என்ற கிளர்ச்சி அமைப்பு  செயல்பட்டு வருகிறது. நாகாலாந்தில் எம்.எஸ்.சி.என் உள்ளிட்ட குழுக்களும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. 

இந்த அமைப்பில் தலைவரான போஹோட்டோ  கிபா என்பவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்வில் மணமக்கள் இருவரின் கையிலும் ஏ.கே56 மற்றும் எம். 16 ரக அதி நவீன தானியங்கி இயந்திர துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டிருந்த புகைப்படம் வைரலாக பரவியுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. 

இந்த புகைப்படம் குறித்து செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் நாகலாந்து காவல்துறைத்  தலைவர் டி ஜான் லாங்க்குமாரிடம் கேட்ட போது, தான் அப்படி ஒரு புகைப்படத்தை பார்க்கவில்லை எனக்கு அது தெரியாது என்று கூறியுள்ளார்.  மணமகன் மற்றும் மணமகளின் பெயர்கள் உடனடியாகத் தெரியவில்லை.  

.