கேரளாவில் போலீஸ் உயர் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு!

எலெட்ரீஷியனின் கார் தன்னுடைய வாகனத்தை மறித்து கொண்டு நிறுத்தப்பட்டதால் உதவி காவல் ஆய்வாளர் ஆத்திரம் அடைந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கேரளாவில் போலீஸ் உயர் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு!

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களை உதவி காவல் ஆய்வாளர் கைது செய்ய வலியுறுத்தினர்.

Thiruvananthapuram:

கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 32 வயதான காவலர் தனது காரை எடுப்பதற்கு இடையூறாக நின்ற எலெக்ட்ரீஷியனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட போது, கீழே தள்ளி விட்டார். இதனால் உதவி காவல் அதிகாருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எலெக்ட்ரீஷியன் சனாலின் கார் நீயாட்டின்கர பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் பி.ஹரிகுமார், காருக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தனது காரை மறைத்துக் கொண்டு எலெக்ட்ரீஷியனின் கார் நின்றதில் ஆத்திரமடைந்த உதவி காவல் ஆய்வாளர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது சானாலை தள்ளி விட்டார். இதில் சென்று கொண்டிருந்த கார் சானல் மீது மோதியது. காயமடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் திங்களன்று இரவு 9.45க்கு நிகழந்தது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உதவிகாவல் ஆய்வாளார் கைது செய்ய வலியுறுத்தினர். இப்போரட்டத்தை தொடர்ந்து, அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன் உதவி காவல் ஆய்வாளர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படுமென்று தெரிவித்தார்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறும்போது, முதல் கட்ட விசாரணையை தொடர்ந்து ஹரிகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.