This Article is From Dec 08, 2018

''3 ஆயிரம் பிற மொழி பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும்''- தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் பிற மொழிகளில் அழைக்கப்படும் ஊர்கள், தெருக்கள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இவை தமிழில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளன.

''3 ஆயிரம் பிற மொழி பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும்''- தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் பிற மொழிகளில் அழைக்கப்பட்டு வரும் ஊர்கள், தெருக்கள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் தமிழுக்கு விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

பிற மொழிகளில் உள்ள ஊர்கள், சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முயற்சிகளை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மேற்கொண்டுள்ளார்.

இன்னும் 2 வாரங்களில் இதுதொடர்பான அரசாணை வெளியிடப்படும். 3 ஆயிரம் பிறமொழிப் பெயர்கள் சேகரித்து, அவை தமிழில் மொழிமாற்றம் செய்ய தயாராக உள்ளன. 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை நடத்தி பிற மொழி பெயர்களை சேகரித்து அனுப்பியுள்ளனர்.

அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், ட்ரிப்ளிகேனி திருவல்லிக்கேணியாக மாறும். டூட்டிகொரின் தூத்துக்குடியாக மாறும். இதுபோன்று 3 ஆயிரத்திற்கும் அதிகமான பெயர்கள் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளன.

.