This Article is From Jan 25, 2019

'மீம்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டார் தமிழிசை' - திமுக நாளிதழ் விமர்சனம்

தமிழிசையின் பேட்டி எப்போது வரும் என வடிவேலு படக் காமெடிகளோடு மீம்ஸ் தயாரிப்பாளர்கள் காத்துக் கிடப்பதாக முரசொலியில் செய்தி இடம்பெற்றுள்ளது.

'மீம்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டார் தமிழிசை' - திமுக நாளிதழ் விமர்சனம்

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக முரசொலி வெளியாகி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • மீம்ஸ் தொடர்பான கேள்விக்கு முரசொலியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது
  • ''தமிழிசையின் பேட்டிக்காக காத்துக் கிடக்கிறார்கள்'' - முரசொலி
  • திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக முரசொலி வெளியாகி வருகிறது

'மீம்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டார் தமிழிசை' என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசையை திமுக நாளிதழான முரசொலி விமர்சித்துள்ளது. 

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கேள்வி பதில் பகுதி இடம்பெற்றுள்ளது. அதில் மீம்ஸ்களை பார்ப்பதுண்டா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

''இன்றைய மீம்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார் தமிழிசை! எப்படி எல்லாம் கலாய்க்கிறார்கள்! ரஜினி, அஜித், விஜய் படங்கள் எப்போது வரும் என அவர்களது ரசிகர்கள் காத்திருப்பது போல தமிழிசையின் பேட்டி எப்போது வரும் என வடிவேலு படக் காமெடிகளோடு மீம்ஸ் தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கிறார்களாம்!''


இவ்வாறு முரசொலியில் செய்தி இடம்பெற்றுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.