மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம் - இறுதிக் கட்டத்தில் மீட்பு பணிகள்

70-க்கும் அதிகமான தேசிய பேரிடர் மீட்பு படையினர் 320 அடி ஆழம் கொண்ட சுரங்கத்திற்குள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம் - இறுதிக் கட்டத்தில் மீட்பு பணிகள்

அதிக செயல்திறன் கொண்ட பம்புகள் வரவழைக்கப்பட்ட நிலையில் நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


New Delhi: 

மேகாலயாவில் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 70-க்கும் அதிகமான தேசிய பேரிடர் மீட்பு படையினர் 320 அடி ஆழம் கொண்ட சுரங்கத்திற்குள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று நீச்சல் வீரர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் புவனேஸ்வரத்தில் இருந்து 10 அதிக செயல் திறன் கொண்ட பம்புகள் கொண்டு வரப்பட்டு சுரங்கத்திற்குள் இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடற்படையின் செயல் திறன் மிக்க 15 நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் துணை தளபதி எஸ்.கே. சிங் கூறுகையில், ''அடுத்த சில மணி நேரங்களுக்கு எங்களால் எந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அவற்றை செய்து வருகிறோம். பம்புகள் மூலம் நீரின் அளவை குறைக்க முயற்சி நடந்து வருகிறது.'' என்றார்.

மேகாலயா சுரங்கத்திற்குள் கடந்த 13-ம்தேதி 15 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்பதற்காக 2 வாரத்திற்கும் மேலாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

அருகில் உள்ள சுரங்கத்தில் இருந்தும், ஆற்றில் இருந்தும் நீர் வெளியேறி சுரங்கத்திற்குள் நுழைவதால் மீட்பு பணியில் சிக்கில் ஏற்பட்டிருக்கிறது. முதலில் குறைந்த அழுத்தம் கொண்ட பம்புகளை வைத்து நீரை வெளியேற்ற முயன்றனர். இதில் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து பக்கத்து மாநிலங்களில் இருந்து அதிக அழுத்தம் கொண்ட பம்புகள் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................