This Article is From Jan 13, 2019

மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்க சென்னையில் இருந்து கருவிகள் அனுப்பி வைப்பு

ப்ளேன்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனம் நீரில் மூழ்கி செயலாற்றும் மீட்பு கருவிகளை மேகாலயாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்க சென்னையில் இருந்து கருவிகள் அனுப்பி வைப்பு

கடந்த மாதம் 13-ம் தேதியில் இருந்து 15 தொழிலாளர்கள் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

Chennai:

சென்னையை சேர்ந்த ப்ளேன்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனம் மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்பதற்காக நீர்மூழ்கி கருவிகளை அனுப்பி வைத்திருக்கிறது.

கடந்த மாதம் 13-ம் தேதியில் இருந்து 15 தொழிலாளர்கள் 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீட்பு பணிகள் தொய்வாக நடப்பதாக கூறி கண்டனம் தெரிவித்தது. சுமார் 1 மாதம் முடிந்துள்ள நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன.

9vtoi7ag

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த மத்திய அரசு ''அதிசயங்கள் நடக்கும்; சுரங்கத்தில் இருப்பவர்கள் உயிருடன் வெளியே வருவார்கள்'' என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் அடுத்த கட்ட முயற்சியாக சென்னையில் இருந்து நவீன கருவிகள் மேகாலயாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ப்ளேன்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனம் நீரில் மூழ்கி மீட்பு பணிகளை மேற்கொள்ளும் கருவிகளை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் மீட்பு பணியில் முன்னேற்றம் ஏதும் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர்.

.