“மாநில தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’‘ - மாயாவதி அறிவிப்பு

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
New Delhi: 

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கான ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி டெல்லியில் அளித்துள்ள பேட்டி-
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சி ஆணவத்துடன் பேசி வருகிறது. அக்கட்சியின் ஊழல் ஆட்சியை மக்கள் மன்னிக்கவும் இல்லை. மறக்கவும் இல்லை. 
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச தேர்தல்களில் மாநில கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் அல்லது தனியாக தேர்தலை சந்திப்போம். பொதுத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரசுக்கு இல்லை. மாறாக கூட்டணி கட்சிகளுக்கு காயத்தை ஏற்படுத்தும் வேலையில்தான் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. 
பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைப்பதற்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் விரும்புகின்றனர். ஆனால் திக் விஜய் சிங் போன்றோர் இந்த கூட்டணியை ஏற்க மறுத்து வருகின்றனர். இவ்வாறு மாயாவதி கூறினார். 
பாஜக கொடுக்கும் நெருக்கடி காரணமாக எதிர்க்கட்சிகளுடன் சேர்வதை மாயாவதி தவிர்த்து வருவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. 

லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................