கூடுதல் லக்கேஜ் கட்டணத்தை தவிர்க்க சூப்பர் ஐடியா: வைரல் வீடியோ

ஜான் டி சர்ட்டும் அணியும் காட்சியை அவரின் மகன் வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் ஏர்போர்ட்டில் நடந்தது என்று டெயில் மெயிலில் செய்தி வெளியாகியுள்ளது.

கூடுதல் லக்கேஜ் கட்டணத்தை தவிர்க்க சூப்பர் ஐடியா: வைரல் வீடியோ

15 டிசர்ட்டை அணிந்து கொள்ளும் ஜான்

விமானத்தில் செல்லும் அதிக லக்கேஜ்களை கொண்டு சென்று அதற்கு கூடுதல் கட்டணம் கட்டிய அனுபவம் அனைவருக்கும் உண்டு. இதோ இதற்கு அட்டகாசமான தீர்வை கொடுக்கிறது இந்த வீடியோ. ஜான் இர்வின் என்பவர் லக்கேஜ்க்கான கூடுதல் கண்டனத்தை தவிர்க்க 15 டிசர்ட்டை தானே போட்டுக்கொண்டு விமானம் ஏறியுள்ளார். 

ஜான் டி சர்ட்டும் அணியும் காட்சியை அவரின் மகன் வீடியோ எடுத்து  அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் ஏர்போர்ட்டில் நடந்தது என்று டெயில் மெயிலில்  செய்தி வெளியாகியுள்ளது. 

வீடியோவில் மகன் “சில டி- சர்ட்டை கழட்டி விடும்படி கூறுகிறார். எதையோ மறைத்து எடுத்துச் செல்வதாக நினைப்பார்கள்” என்றூ கூறுகிறார்.  ஆனால் ஜான் 15 டீ-சர்ட்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்.