This Article is From Feb 27, 2020

மலேசியப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதிர் முகமது!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகச் சமீபத்தில் மகாதிர் முகமது தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மத்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வரும் மத பிரசாரகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவின் மகாதிர் அரசுதான் அடைக்கலம் கொடுத்துள்ளது.

மலேசியப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதிர் முகமது!!

94 வயதாகும் மகாதிர் முகமது பார்ட்டி பிரிபுமி பெர்சாது மலேசியா கட்சியை சேர்ந்தவர்.

மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு அமைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் மலேசியாவில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகிறது.

ராஜினாமா தொடர்பாக மலேசிய மன்னருக்கு மகாதிர் 2 வரியில் கடிதம் எழுதியிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

94வயதாகும் மகாதிர் முகமது பார்ட்டி பிரிபுமி பெர்சாது மலேசியா கட்சியைச் சேர்ந்தவர். நாட்டை ஆளும் பகதான் ஹரப்பன் கூட்டணியிலிருந்து மகாதிர் முகமதுவின் கட்சி வெளியேறியுள்ளது. இந்த தகவலைக் கட்சித் தலைவர் முகியுதீன் யாசின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மலேசியப் பிரதமராகக் கடந்த 1981 முதல் 2003-வரை மகாதிர் பொறுப்பிலிருந்தார். இதன்பின்னர், மீண்டும் 2018 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மலேசியப் பிரதமரானார். 

இன்றைக்கு மகாதிர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதற்கு, அவரது கட்சியின் இன்னொரு முக்கிய தலைவராக இருக்கும் அன்வர் இப்ராகிமுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் முக்கிய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளில் பிரதமர் பொறுப்பை தன்னிடம் மகாதிர் ஒப்படைப்பார் என வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் அதனை அவர் நிறைவேற்றவில்லை என்றும் அன்வர் இப்ராகிம் இன்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மகாதிர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகச் சமீபத்தில் மகாதிர் முகமது தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மத்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வரும் மத பிரசாரகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவின் மகாதிர் அரசுதான் அடைக்கலம் கொடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாட்டை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

.