This Article is From Mar 06, 2019

விமான பணிப்பெண்களுக்கு மேக்கப் தேவையில்லை: விர்ஜின் அட்லாண்டிக் அதிரடி

கேபின் குழுவில் உள்ள பெண்கள் எந்தவித மேக்கப்பும் அணிய தேவையில்லை. அவர்கள் பொதுவான லிப்ஸ்டிக் மற்றும் பவுண்டேஷன்களை அணிய விரும்பினால் அணியலாம் என்று கூறியுள்ளது.

விமான பணிப்பெண்களுக்கு மேக்கப் தேவையில்லை: விர்ஜின் அட்லாண்டிக் அதிரடி

புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ள விர்ஜின் அட்லாண்டிக் அவர்களின் சுதந்திரத்தை அளிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது

விர்ஜின் அட்லாண்டிக்  ஏர்லைன் நிறுவனம் தனது கேபின் குழுவில் உள்ள பெண்கள் மேக்கப் இல்லாமல் பணியாற்றலாம் என்று கூறியுள்ளது. மேலும் அவர்கள் ஸ்கர்ட்களுக்கு பதில் ட்ரவுஸர்களை அணியலாம் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக ஏர்லைன் யுனிஃபார்ம் துறை அளித்த ட்ரவுஸர்களை பயன்படுத்தும் முறை இருந்தது.

புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ள விர்ஜின் அட்லாண்டிக் அவர்களின் சுதந்திரத்தை அளிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாம். 

கேபின் குழுவில் உள்ள பெண்கள் எந்தவித மேக்கப்பும் அணிய தேவையில்லை. அவர்கள் பொதுவான லிப்ஸ்டிக் மற்றும் பவுண்டேஷன்களை அணிய விரும்பினால் அணியலாம் என்று கூறியுள்ளது.

முன்னர் கட்டாயமாக இருந்த ட்ரவுஸர்கள் தற்போது விரும்ப்பமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கான குழுவின் ரியாக்ஷன்கள் கேட்கப்பட்டுள்ளன என்று விர்ஜின் அட்லாண்டிக் தெரிவித்துள்ளது.

பல விமான ஏர்லைன்ஸ்களில் கேபின் குழுவினர் மேக்கப் அணிந்துள்ளனரா என்று சோதனை செய்யும் முறை உள்ளது என்பதும், 2016ம் ஆண்டு பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் ஒரு கேபின் குழு பெண்ணை மேக்கப் அணியாததற்காக பணி நீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.