''தமிழ்நாட்டை வளமாக வைத்திருப்பது பிரதமர் மோடியின் கடமை!'' - கமல் பேட்டி!!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் போட்டியிட்டது.

''தமிழ்நாட்டை வளமாக வைத்திருப்பது பிரதமர் மோடியின் கடமை!'' - கமல் பேட்டி!!

தேர்தல் முடிவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்.

எங்களுக்கு பாராட்டுகள் மக்களிடம் வந்த வண்ணம் உள்ளது. நல்ல வழியில் போய்க்கொண்டிருக்கிறோம், நேர்வழியில் சென்றால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். 

நேர்மை வென்றதாக தமிழகமே மார்தட்டிக் கொள்ளலாம் என்பதை எங்களுக்கு கிடைத்த வாக்குகள் காட்டுகின்றன. நாங்கள் பிறந்து 14 மாதங்கள்தான் ஆகியுள்ளன. தேர்தல் முடிவுகள் நெஞ்சை நிமிர்த்து பேசும் அளவுக்கு மக்களும், ஊடகங்களும் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளன. 

மக்கள் மாற்றத்திற்காக எங்களுக்கு வாக்களித்தார்கள். எங்கள் பயணம் நீண்டது என்பதுதான் இந்த தேர்தலில் நாங்கள் கற்ற பாடம். வறுமையை வெல்வது என்பதுதான் நாங்கள் கற்றுக் கொண்டதுதான் நாங்கள் கற்ற பெரும் பாடம். பணப்புயலுக்கு மத்தியில் இந்த இலக்கை தொட்டதே சாதனைதான். 

தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும் வைத்திருப்பது பிரதமர் மோடியின் கடமை. வெற்றி பெற்ற மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தை மோடி கருத வேண்டும். அரசியலில் ஒரு தலைவர் இறந்து விட்டால் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக கருதக்கூடாது. மக்கள் அதனை உடனே நிரப்பி விடுவார்கள். அது அரசியல், சினிமா என எதுவாக இருந்தாலும் சரி. 

விவசாயம் கெட்டுப்போகாத திட்டங்களை மட்டுமே இங்கு கொண்டு வரக்கூடாது. மற்றபடி வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் நீதி மய்யம் எதிரானது அல்ல. தமிழகத்தின் எழுச்சிதான் மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு. 

இவ்வாறு கமல் பேசினார்.