நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் உத்தவ் தாக்கரே சர்க்கார்; ட்விஸ்ட் வைக்குமா பாஜக?

Maharashtra Government 2019: சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியான, மகா விகாஸ் கூட்டணியை உத்தவ் தாக்கரே (59) தலைமை தாங்குகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் உத்தவ் தாக்கரே சர்க்கார்; ட்விஸ்ட் வைக்குமா பாஜக?

Maharashtra: மகா விகாஸ் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார் உத்தவ் தாக்கரே.

Mumbai:

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று பிற்பகல் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளார். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 80 மணி நேரத்தில் கவிழ்ந்ததை தொடர்ந்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபற உள்ளது. 

சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியான, மகா விகாஸ் கூட்டணியை உத்தவ் தாக்கரே (59) தலைமை தாங்குகிறார். தொடர்ந்து மகாராஷ்டிராவின் 18வது முதல்வராக உத்தவ் தாக்கரேக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் நேற்று செய்து வைத்தார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதனிடையே, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர் விடாமுயற்சியுடன் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக திகழ்ந்தாலும், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், ஆட்சி அமைக்க சிவசேனாவின் துணை தேவைப்பட்டது. எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனா வலியுறுத்தி வந்தது.

எனினும், தனிப்பெரும் கட்சியான நாங்கள் எதற்கு முதல்வர் பதவியை விட்டுத்தர வேண்டும் என பாஜவும் விடப்படியாக மறுத்தது. இதனால், பாஜவால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் துணையுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் பதவியை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் உத்தவ் தலைமையிலான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. ஏற்கனவே ஆளுநர் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டிருந்தார். 

இதனை உறுதி செய்யும் விதமாக மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகரக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ திலீப் வால்ஸ் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜகவின் சந்தரகாந்த் பாட்டீல் கூறும்போது, மறைமுக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், நிச்சயம் அவர்களால் வெற்றி பெற முடியாது என்றும், இது எனது வெளிப்படையான சவால் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.