This Article is From Jun 09, 2020

மகாராஷ்டிராவில் 90 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு! மும்பையில் 51,000 பேருக்கு தொற்று

நேற்று அனைத்து அரசு அலுவலகங்களும், 15 சதவீத ஊழியர்களுடன் செயல்படுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இதேபோன்று சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

மகாராஷ்டிராவில் 90 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு! மும்பையில் 51,000 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3,289 ஆக அதிகரித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது
  • மும்பையில் மட்டும் 51 ஆயிரம்பேருக்கு கொரோனா தொற்று உள்ளது
  • தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி
Mumbai:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மும்பை நகரில் மட்டும் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மும்பை உள்ளது. இன்றைய கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா உருவான சீனாவிலேயே சுமார் 84 ஆயிரம்பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கையை மகாராஷ்டிரா கடந்த வாரம் கடந்திருந்தது.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3,289 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுக்க 9,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதீ செய்யப்பட்டது. இவர்களில் கால்வாசிப் பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் ஆவர்.

நேற்று அனைத்து அரசு அலுவலகங்களும், 15 சதவீத ஊழியர்களுடன் செயல்படுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இதேபோன்று சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

சுய தொழில் செய்வோர், பிளம்பர், எலக்ட்ரீசியன், பூச்சி ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

.