அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா போட்டி!! வாரணாசியில் மோடி!

2014 மக்களவை தேர்தலில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து களத்தில் நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா போட்டி!! வாரணாசியில் மோடி!

2014 மக்களவை தேர்தலில் அமித் ஷா போட்டியிடவில்லை.

New Delhi:

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அத்வானியின் பெயர் இடம்பெறவில்லை. அவர் கடந்த 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட காந்தி நகர் தொகுதி பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2014 மக்களவை தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அத்வானி தன்னை எதிர்த்து களத்தில் நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே மக்களவை உறுப்பினராக இருக்கும் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ஒடிசாவில் உள்ள கோவில் நகரமான பூரியில் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், வாரணாசியில் மோடி போட்டி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூர் தொகுதியில் களம் காண்கிறார்.

Newsbeep

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் ஸ்மிருதியை ராகுல் காந்தி லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கிழக்கு அருணாசல பிரதேச தொகுதியில் போட்டியிடுகிறார். நாடு முழுவதும் மொத்தம் 20 மாநிலங்களில் போட்டியிடும் 184 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.