This Article is From Apr 26, 2019

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடாதது ஏன்? ரகசியத்தை உடைத்தது காங்கிரஸ்!!

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடாதது ஏன்? ரகசியத்தை உடைத்தது காங்கிரஸ்!!

கடந்த பிப்ரவரியில்தான் நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா

New Delhi:

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 2 மாதங்களுக்கு முன்பாக நேரடி அரசியலில் குதித்தவரும், உத்தர பிரதேசத்தில் 40 மக்களவை தொகுதிகளுக்கு காங்கிரசின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  

மோடி – பிரியங்கா நேருக்கு நேர் மோதினால் அது நாட்டின் மிகப்பெரும் நட்சத்திரப் போட்டியாக அமைந்திருக்கும் நிலையில் அதற்கு வாய்ப்பில்லாமல் போயுள்ளது. பிரியங்கா போட்டியிடாததற்கு தேர்தல் பயமே காரணம் என பாஜக கூறி வருகிறது.

இந்த நிலையில் பிரியங்கா ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பித்ரோதா ரகசியத்தை உடைத்துள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தியே முடிவு எடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி விட்டார். தனக்கு இருக்கும் பொறுப்பை பிரியங்கா நன்றாகவே உணர்ந்துள்ளார். ஒரு தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட்டு அங்கு முழு கவனத்தை செலுத்துவதற்கு பதிலாக, தனக்கு அளித்த பணியை சிறப்பாக செய்வதுதான் சரியானதாக இருக்கும் என பிரியங்கா கருதியுள்ளார். எனவே மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்பது பிரியங்கா எடுத்த முடிவு.

இவ்வாறு அவர் கூறினார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

.