This Article is From Mar 29, 2019

''உலகை சுற்றும் மோடிக்கு சொந்த தொகுதிக்கு வர நேரம் இல்லை'' : பிரியங்கா காந்தி விமர்சனம்

கடந்த 5 ஆண்டுகளில் தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஒரு கிராமத்திற்கு கூட மோடி செல்லவில்லை என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்கிறார் பிரியங்கா

''உலகை சுற்றும் மோடிக்கு சொந்த தொகுதிக்கு வர நேரம் இல்லை'' : பிரியங்கா காந்தி விமர்சனம்

மக்களுக்கு எதிரான அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது: பிரியங்கா

Faizabad, Uttar Pradesh:

கடந்த 5 ஆண்டுகளில் சொந்த தொகுதியான வாரணாசியில் எந்த கிராமத்திற்கும் மோடி செல்லவில்லை என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். உலகைச் சுற்றும் மோடிக்கு சொந் தொகுதி செல்ல நேரம் இல்லை என்றும் பிரியங்கா பேசியுள்ளார்.

உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பைசாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது-

வாரணாசி மக்களை சந்தித்து பேசினேன். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒரு முறைகூட தொகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு செல்லவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

அவர் அமெரிக்கா, ஜப்பான், சீனா என உலக நாடுகளுக்கு செல்கிறார். ஆனால் சொந்த தொகுதி மக்களை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் இல்லை. சொந்த தொகுதி மக்களுக்காக அவர் எதுவுமே செய்யவில்லை. ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. 

இது சாதாரண விஷயம் அல்ல. மக்களை புறக்கணித்தது என்பது அரசின் உள்நோக்கத்தை காட்டுகிறது. இதனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகின்றனர். 

மக்கள் விரோத, விவசாயிகள் நலன்களை புறக்கணிக்கின்ற அரசாக பாஜக அரசு உள்ளது. யாருக்கு நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும் நேரம் வந்து விட்டது. 

இவ்வாறு பிரியங்கா பேசினார். உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் ஒருபக்கமும், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒரு பக்கமும் போட்டியிடுகின்றன. இதனால், வாக்குகள் சிதறி பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

.