This Article is From Apr 02, 2019

'காங். தேர்தல் அறிக்கையை முழுவதுமாக படியுங்கள்' - வாக்காளர்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்!!

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் இன்று வெளியிட்டது. நாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

உத்தர பிரதேசத்தில் தேர்தல் பணிகளில் பிரியங்கா காந்தி பிஸியாக உள்ளார்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது
  • வறுமை ஒழிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன
  • தேர்தல் அறிக்கை குறித்து பிரிங்கா காந்தி ட்விட் செய்திருக்கிறார்
New Delhi:

காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை உண்மையான பிரச்னைகளை பேசுவதாக கூறியுள்ள பிரியங்கா காந்தி இளம் வாக்காளர்கள் இந்த அறிக்கையை முழுவதுமாக படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதில் வறுமை ஒழிப்பு திட்டமான வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்குவது, வேலையின்மையை அகற்ற நடவடிக்கை எடுப்பது, மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

'காங்கிரஸ் வழங்கும்' என பொருள்படும் என்ற ஆங்கில வார்த்தை தேர்தல் அறிக்கையின் முகப்பில் இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் படமும், காங்கிரஸ் கட்சியின் கை சின்னமும் முகப்பில் வைக்கப்பட்டுள்ளன. 
 


இதனை ட்விட் செய்துள்ள பிரியங்கா காந்தி, ''நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் குறிப்பாக இளம் வாக்காளர்கள், முதன் முறையாக வாக்களிப்பவர்கள் தயவு செய்து காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படிக்க வேண்டும். நாட்டின் உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தேர்தலாக இதனை மாற்றித் தர வேண்டும்'' என்று கூறியுள்ளார். 

என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில்,'காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை இளம் வாக்காளர்களுக்கு நாட்டின் உண்மை பிரச்னையை அறிந்து கொள்வதற்கு உதவும்' என்று கூறினார். 

இதற்கிடையே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. 'நாட்டை பிளவுபடுத்தும் அம்சங்கள் இதில் இருக்கின்றன. நடைமுறையில் சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது' என்று பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி விமர்சித்திருக்கிறார். 

.