வாக்கு வித்தியாசத்தில் எல்.கே. அத்வானியை மிஞ்சிய அமித் ஷா

Election Results: 2014 ஆண்டு தேர்தலில் எல்.கே. அத்வானி  4.83 லட்ச வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அந்த எண்ணிக்கையை விட கூடுதலாக அமித் ஷா பெற்றுள்ளார்.

வாக்கு வித்தியாசத்தில் எல்.கே. அத்வானியை மிஞ்சிய  அமித் ஷா

Election Results 2019: ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Gandhinagar:

 பாஜக தலைவர் அமித் ஷா 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியை பெற்றுள்ளார். அமித் ஷா 8.75 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜே.சவ்தா 3.31 லட்சம் வாக்குகளை பெற்றார். இருவருக்கும் இடையில் 5.44 லட்சம் வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

குஜராத்தின் மாநிலத்தின் நட்சத்திர வேட்பாளரான அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி போட்டியிட்ட காந்தி நகரில் போட்டியிட்டார்.

2014 ஆண்டு தேர்தலில் எல்.கே. அத்வானி  4.83 லட்ச வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அந்த எண்ணிக்கையை விட கூடுதலாக அமித் ஷா பெற்றுள்ளார்.

பாஜக கடந்த ஆட்சிக் காலத்தை விட கூடுதலாக இடங்களை பெற்று அமோக வெற்றியினை பெற்றுள்ளது. பாஜக 300 இடங்களை பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 282 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.