This Article is From Jun 26, 2020

ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ குழுவினருடன் 29ம் தேதி முதல்வர் எடப்பாடி ஆலோசனை!

கொரோனா தொடர்பான மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ குழுவினருடன் 29ம் தேதி முதல்வர் எடப்பாடி ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ குழுவினருடன் 29ம் தேதி முதல்வர் எடப்பாடி ஆலோசனை!

ஜூன்.30ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனிடையே, மதுரையிலும் தொற்று பரவல் அதிகமாக காணப்பட்டதால் அங்கும் சென்னையை போல், 24ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மற்றும் சில மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு  மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் கடந்த 24ஆம் தேதி ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து வரும் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

.